×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: m ஏற்பாடுகள் தீவிரம் m கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், மார்ச் 2: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 28வது ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (3ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இம்முகாமில், பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் பலனாக இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

மாவட்ட முழுவதும் நடைபெறும், இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுகாதாரதுறை மூலமாக மேற்பார்வையாளர்களும், ஆரம்ப சுகாதார நிலைய அளவில் மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியில் சுகாதாரத் துறை மூலமாகவும், சத்துணவு துறை மூலமாகவும் தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாகவும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து போட்டிருந்தாலும், இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நாளன்று பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும். இவ்வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

93,394 குழந்தைகள் இலக்கு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வேறு மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள், செங்கல் சூளையில் பணிபுரியும் இருளர் குழந்தைகள், நரிக்குறவர் குடியிருப்புகள் ஆகியோரின் குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது குறிப்பிடதக்கது.

காலை முதல் மாலை வரை
பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 3ந் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள்
மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் என 731 மையங்களில் வழங்கப்படும். இதைத்தவிர்த்து நடமாடும் குழுக்கள் மூலமாகவும், பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையம் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: m ஏற்பாடுகள் தீவிரம் m கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Polio ,Drip ,Camp ,Kanchipuram District ,Kanchipuram ,drip camp ,Collector ,Kalachelvi Mohan ,District ,
× RELATED சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்